Monday, February 5, 2018

உரை



அன்புள்ள ஜெ

துரியோதனன் சபையில் ஆற்றும் அந்த உரை மிகச்செறிவானது. இரண்டுவகையில் அவன் அந்த தரப்பை நியாயப்படுத்துகிறான். அந்தக்கால சிந்தனைமரபின்படி அது இரண்டும் மிகவும் முக்கியமானவை. ஒன்று அவன் புராணிக அடிப்படையிலே சொல்கிறான். பூமியாகிய பிருது என்னும் பசுவை கொண்டுவந்தவர்கள் ஷத்ரியர்கள். ஆகவே அனைவருமே அவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள்.

இரண்டாவதாகத் தத்துவார்த்தமாகச் சொல்கிறான். அதன்படி ஷத்ரியர்களுக்குரியது மண். பிற சாதியினருக்குரிய சொல் பொன் முதலானவை மண்ணிலிருந்து வருபவை. ஆகவே அவர்கள் ஷத்ரியர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மிகவும் கூர்மையாக இந்த இரு வாதங்களையும் முன்வைத்து அவையை அவன் வென்றுவிடுகிறான்.

இதுதான் அரசனின் பேச்சு. ஆனால் துரியோதனன் இதுவரை இப்படி அறிவுடன் பேசியதே இல்லை. வெறும் மல்லனாகவே அவன் பேசுவது வழக்கம். ஆகவே அவனுடைய இந்நிலை ஆச்சரியமளிக்கிறது. அவனிடமுள்ள கலிதான் அப்படி அவனைப்பேசவைக்கிறார் என்று சொல்லத்தோன்றுகிறது


சாரங்கன்