Sunday, February 4, 2018

அரக்கு மாளிகை


ஜெ,
இரண்டு நாட்களாக அரங்கு கூடிக் கொண்டிருக்கிறது. பாரதத்தின் பெரிய அவை, அனேகமாக அனைத்து ஷத்ரிய அரசுகளுமே அங்கிருக்கின்றன. ஆனால் அவர்கள் ஷத்ரியர்களுக்குரிய  நிமிர்வின்றி பிறரிடம் தங்கள் இடம் என்ன என்பது குறித்தே குறியாக இருக்கின்றனர். தங்கள் சிறப்பால் அல்ல, தங்களை  விட பெரிய ஒரு அமைப்பின் மீது ஒட்டிக் கொண்டிருப்பதன் வழியாகவே ஷத்ரியர்களாக இருக்கிறார்கள் . அதன் ஒரு உலுக்கல் போதும் உதிர்ந்து போவார்கள். 

இத்தனை பேரும் சேர்ந்து இருந்தும் தோற்றதன் காரணம் அதுதான், இந்தப் போர் இவர்களுக்கு உள்ளிருந்து வரவில்லை, ஒரு சந்தர்ப்பம். அதில் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதே பிரதானமாக இருக்கிறது. ஆகவே எந்நேரமும் ஒரு வெடிப்புக்குத் தயாராகவே இருக்கிறார்கள். அதிலேயே வருகிறது உலரவைக்கப் பட்ட அரக்கென. 

அந்த சூழல் ஒரு பதட்டத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பானுமதி வெடித்தெழுந்து இடமுலை அறுத்தெறியாமல் இருக்க வேண்டும் எனவும், அறுத்தெறிய வேண்டும் எனவும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருக்கிறது.

ஏ வி மணிகண்டன்