Sunday, February 18, 2018

யாகசாலை




அன்பு ஜெ ,


      இன்றைய "குருதிச்சாரலில்" பசுவைக் குறிக்கும் ஆ சப்தம் செவ்வனே கையாளப்பட்டது என்றே கூற வேண்டும்.ஆவலர் , ஆநீர் , ஆநிலை.


                புருஷமேத வேள்விக்கான ,கட்டமைப்பை,  அழகான வர்ணனைனாலயே எழுப்புகின்றீர்.எங்கள் சித்தம் அதைக் கொஞ்சம் சிரமத்தினூடே உருவாக்குகின்றது.அதர்வ வேதவேள்வியான அது ,கொடியநோயை நச்சுமருந்திட்டே குணமாக்குவது போலவும், எதிர்வினை நோய்ப்பட்டே கழிக்க வேண்டுவதை விதுரர் திறன்பட பதற்றத்துடன் உரைக்கின்றார்.இது கொடிய நோயான புற்றுநோயையே குறிக்கின்றது என நினைக்கிறேன். அந்நோயிற்க்கு தீர்வான கீமோதெரபி மேற்கொள்ளுபவர்கள், முதலில் தங்கள் அழகான கேசத்தை இழப்பர்.பின் பலவகையான உடல் மாற்றங்களுக்கும் ,மன கிலேசங்களுக்கும் ஆட்பட்டு ,தெய்வ அனுக்கிரகம் இருப்பின் மீள்வர்.


                அழகான இட அமைப்பின் வர்ணனையில் நாம் மூழ்கினாலும், பலி ஆட்டின் அலங்காரத்தையே நினைவுறுத்த , சடக்கென்று புத்ரமேதம் எனப்படும் , தன் புத்திரர்களையே களப்பலிக் கொள்ளும் நிலயை அனாயாசமாக விளக்கி , அவர்கள் அறைக்கூவல் விடுவது ,அதிர்வையே ஏற்படுத்துகிறது.

 
அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.