Tuesday, March 20, 2018

சொல்லவைக் குறிப்புகள் - பகுதி 1 (குருதிச்சாரல் - 74)


    
வெண்முரசின் முக்கியமான சொல்லவை விவரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் வெண்முரசு  என்ற பெருங்காவியத்தின் தத்துவ நோக்கம்  இங்கு மையம் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். . இதற்கு  முன்னர் பல்வேறு தத்துவங்கள் வெண்முரசில் விவரிப்பட்டுள்ளனவேதமுடிவும் அளவைநெறித் தத்துவமும்  ஒன்றை ஒன்று தர்க்கித்துக்கொள்வது இப்போது நடக்கிறது. அப்போது மிக வலிமையாக இருந்த பூர்வமீமாம்சை என்ற அளவை நெறியை விட மேலானதாக வேதமுடிபு கொள்கையை நிலை நிறுத்த முயலும் ஒரு விவாதமாக இது அமைகிறதுஇது போன்ற தத்துவ விவாதங்களில் கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொள்ளுதல் எப்போதும் எனக்கு கடினமான ஒன்றுவிரைவில் அந்தக் கருத்துக்குவியலுக்குள்   நான் தொலைந்து போய்விடுவேன்ஆகையால் இந்தப் பெரும் விவாதத்தை குறிப்பெடுத்துக்கொண்டு  வாசிப்பது சரியாக இருக்கும் என நினைத்தேன். ஆகவே ஒரு விவாதத்தின் ஒவ்வொருவர் கூறும் கூற்றிலிருந்து  முதன்மைக்  கருத்தை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு பின்னர் மனதிற்குள் ஒரு திட்ட வரைபடத்தை உருவாக்கிகொள்வது என தீர்மாணித்தேன். இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு மீண்டுமொருமுறை முழுமையாக வாசித்தல் புரிதலை அதிக்கப்படுத்தும் என நினைக்கிறேன். நான் அவ்வாறு எடுத்த குறிப்புகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.    


நால் வேதங்கள்ரிக் யஜூர், சாமம், அதர்வணம் 

வேதக்கூறுகள் ஆறு : சிக்ஷா, கல்பம், சந்தஸ், வியாகரணம், நிருக்தம், ஜியோதிஷம்
துணைவேதங்கள் நான்கு: கந்தர்வவேதம், தனுர்வேதம், ஸ்தாபத்யவேதம், ஆயுர்வேதம் 

கிருஷ்ணரின் :  மேற்கண்ட அனைத்து வேதப் பிரிவுகளுக்குள் உயர்வு தாழ்வு உண்டா? இல்லையெனில் ஏன் இவற்றை பயின்று பின்பற்றுபவர்களுக்கிடையே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன?

உக்ரர் : அனைத்திலும்  அனல் உறைவதைப்போல இந்த அனைத்து வேதங்களிலும் மெய்மை இருக்கின்றது. ஆனால் வேள்வித்தீயே அனைத்திலிலும் உயர்ந்ததென்று கருதப்படுகிறது. அதற்கே அவியிடப்படுகிறது. அதைப்போன்று நால் வேதங்களே முதன்மையானவை.

கிருஷ்ணர்:  அனல் தோன்றும் இடம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால்  அனலென எழுந்ததை நாம் அறிகையிலும், அறியாது இருக்கையிலும் அதன் தன்மை என இருப்பது எது

கௌதம சிரகாரி:   அனல் அதன் தன்மையால் வரையறுக்கப்படுகிறது  அனல் எனபது அனல் நிகழ்வதற்கான நெறி.  "“மாறாத்தன்னியல்பின் ஒரு பகுதியையே பொருள் தன் சிறப்பியல்பென்றும் காட்டுகிறது. அவையிரண்டும் வேறல்ல என்று கௌதமம் உரைக்கிறது."  அதாவது எந்த ஒரு பொருளிலிருந்து அனல் வெளிப்பட்டாலும் அந்தப் பொருளின் சிறப்பியல்பாக அது தெரிந்தாலும் அனல் என்ற மாறாத இயல்பையே அது கொண்டிருக்கிறது. ஆகவே அனல் என்ற மாறாத இயல்புக்கும் வெவேறு பொருட்களின் வழி வெளிப்படும் அனலுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை
கிருஷ்ணர்வேதத்தில் வெளிப்படும் மெய்மைக்கான நெறி என்ன. (அதாவது மெய்மையின் வரையறை என்ன?)
கௌதம சிரகாரி:     பொருளின் இயல்பு என்பது அதைக் குறிக்கும் சொல் என ஆகிறது. சொல்லால் இயல்பு அறியப்படுகிறதுஇயல்பு அப்பொருளுக்கான நெறி(வரையறை) என ஆகிறது. அந்த வரையறையே பொருள் என ஆகிறது

வசிட்ட குந்ததந்தர்:  வேதமெனும் அனலின் அனல்மை என்பது பிரம்மமே” (பிரம்மம் என்பதை நாம் மாறா பேருண்மை எனக் கொள்ளலாம்)

கிருஷ்ணர்: அனைத்து பொருள்களிலிருந்து வெளிப்படும் அனல் அனல்மை என்ற ஒரே இயல்பைக் கொண்டிருப்பதால் அனைத்து அனல்களும் வேறுபாடுகள் அற்றது என்று ஆகிறது. அதைப்போன்று அனைத்து வேதங்களின் இயல்பும்  பிரம்மமென வெளிப்படுகிறது என்றால்  அனைத்து வேதங்களுக்குள் ஏன் வேறுபாடுகள்ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?

கௌதம சிரகாரி அனைத்து அனல்களும் ஒன்றென்றாலும் அந்த அனல்கள் கொண்டிருக்கும் மாசுக்களால் அவை வேறுபடுகின்றன. எவ்வித மாசுமற்ற தூய அனல் உயர்ந்ததுஅதர்வ, சாம, யஜூர், ரிக் வேதங்களில் பிரம்மம் வெளிப்படுகையில் அதன் தூய்மையின் காரணமாக அவை வேறுபடுகின்றன. தூய்மையின் அளவால் அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் அமைகின்றன.

கிருஷ்ணர்வேதப்பிரிவின் தூய்மையை  அளவீடு செய்தலுக்கான அணுகுமுறை:  

           
வேதம்           -           இயல்பு              -    உணர்வு -       பணி               

      1.
அதர்வ வேதம் - பிரம்மத்தை விழைகிறது   -  விழைவு   -    பிரம்மமே அனைத்தும் என்பதால்  அனைத்தையும் விழைவது

      2.
யஜூர் வேதம்  - பிரம்மத்தை நிகழ்த்துகிறது - அளித்தல்   - அனைத்தையும் பிரம்மத்திற்கு அளித்தல் 

      3.
சாம வேதம்      - பிரம்மத்தை இசைக்கிறது   - உணர்தல்   - ஓசையினூடாக பிரம்மத்தை அறிதல்
      4.
ரிக் வேதம்        - பிரம்மத்தை சுட்டுகிறது    - அதுவாதல்   - பிரம்மத்தைத்தவிர வேறொன்றுமில்லையென உணர்தல் 
  
அதர்வத்தை விட யஜூர்  மேலானது சாமம் அதைவிட உயர்ந்ததுரிக் வேதம் அனைத்து வேதங்களிலும் உயர்வானது.  
   
ரிக் வேதத்தின் உச்சம் என இருப்பது அதன் இறுதிப்பகுதி அது வேத முடிபுக்கொள்கை (வேதாந்தம்).  ஆக வேதத்திற்கு மையமென இருப்பது, வேதத்தின் பலனாக இருப்பதுவேதத்தின்இலக்கென இருப்பது, வேதத்தின் இறையென இருப்பது  வேத முடிபுஆகும்
  
அனைத்து அறிவுமே பயனுள்ளவை, ஆகையால் அனைத்து அறிவுமே வேதம் என ஆகிறது. ஆனால் அறிதல்கள் முரண்படுகையில் எதை நாம் பிரமாணமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் முறை ஒன்று இருக்கிறது. துணைவேதங்கள் முரண்படுகையில் வேதத்திற்கு அணுக்கமானது ஏற்றுக்கொள்ளப்படும், வேதங்கள் முரண்படுகையில் ரிக்வேதத்திற்கு அணுக்கமானது சரியெனக்கொள்ள வேண்டும்ரிக்வேதத்திற்குள் ஏற்படும் முரண்களுக்கு வேதமுடிபுக்கு சரியானதே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்
  
வேத முடிபு கொள்ளும் மெய்மையே வேதங்கள் அனைத்திலும் உறைந்திருப்பது.  

கௌதம சிரகாரி:   இவையெல்லாம் உண்மையென  இருக்கலாம்வேதத்தின்  உச்சம் வேத முடிவு மெய்மையேஒரு முனிவர் சென்றடையவேண்டிய இலக்கு.   ஆனால் மனிதர்களுக்கு வேதங்களின் உயர் மெய்மை தெரிந்திருக்க வேண்டியது அல்ல. அது எல்லோராலும்  அடையக்கூடியதும் அல்ல.   அந்த வேத மெய்மையின் உச்சத்திலிருந்தே வேதங்கள் கிளைந்தெழுந்து பெருகி நிற்கின்றன. இப்படி பெருகி நிற்பவையே அனைவருக்குமானது. அவை தூய மெய்மையிலிருந்து  விலகி வந்திருக்கலாம்ஆனால்  மக்கள் இப்படி பெருகி வந்த வேதத்தினாலேயே பயன்பெறுகிறார்கள். ஆகவே வேதத்தை மீண்டும் தூய மெய்மைக்கு திருப்ப முடியாதுஅவர்களின்  அன்றாட வாழ்வுக்கு வேத முடிபுகொள்கைகள் என்ற உச்சம் வழிகாட்டுவதில்லை. அவர்களுக்கு பயனளிப்பது வேதங்களேஅதிதூயதான மெய்மை எளிய மக்களால் காண இயலாதது, அவர்களின் எளிய நோக்கங்கள் ஈடேற உதவாதது. சமூகம் என திரண்டிருக்கும் மனிதர்களுக்கு பலனற்றது வேத முடிவு. ஆனால் வேதங்கள் மற்றும் அனைத்து துணவேதங்களும் எளிய மக்களுக்கென இருப்பவைஅவர்கள் வேதங்களை வேள்விகள் மூலமாகவே அணுகமுடியும்சமூகத்தின் அனைத்து கட்டுமானங்களும் மக்களுக்காகவே. ஆகவே அவர்களுக்கு பயன்படாத வேத முடிவுக்கொள்கைக்கு சமூகத்தில் இடமில்லை. அது அனைத்தும் துறந்து சென்றவர்களுக்கானது


கிருஷ்ணர்:  வேதமெய்மையை அறிந்து ஒருவன் அதில் தேவையானதை  மக்களிடம் சேர்ப்பது முனிவர் கடமையென ஆகிறது. ஆகவே முனிவர் வழிகாட்டல் சமூகத்திற்கு தேவை. சமவெளியில் பாய்ந்தோடும் கங்கையில் மாசு கலந்திருந்தாலும் அந்த நீரைப் பயன்படுத்துகையில் நாம் அதிலிருந்து எடுத்துக்கொள்வது தூய கங்கையையே. அப்படியே வேதங்கள் பலவாறு பெருகி வந்தாலும் அதில் ஒருவன் கண்டடையவேண்டியது அவனுக்கான வேதமுடிபு மெய்மையையே. வேத முடிபுக்கு முரண்படும் ஒன்று களைந்தகற்றப்படவேண்டும்.     தன்னை அனைத்து தளையிலிருந்து விடுவிக்கும் எந்த ஒரு செயலும் வேள்வியென ஆகும்


கௌதம சிரகாரி:   ஆம் அனைத்து செயல்களிலும் வேதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

கிருஷ்ணர்: பின் வேள்வி என தனியாக ஏன் ஒன்று நிகழ்த்தப்படுகிறது.

கௌதம சிரகாரிஅனைத்திலும் தெய்வம் இருக்கிறது என்றாலும் நாம் கருவறையில் அமைந்திருக்கும் கற்சிலையே தெய்வமென தொழுவதைப்போல செயல்களுக்குள் வேள்வியென ஒன்று தேவைப்படுகிறது 

கிருஷ்ணர். எதனால் ஒரு செயலை நாம்  வேள்வி எனக் கொள்கிறோம்

கௌதம சிரகாரி: முழுமையாக செய்யப்படும் எவ்வொரு செயலும் வேள்விஎன ஆகும்
]
கிருஷ்ணர்:  செயலில் உளம்  செலுத்தாமல் எந்திரகதியில் இயற்றப்படும் ஒன்றை வேள்வி எனச் சொல்ல முடியுமா?

கௌதம சிரகாரி உள்ளம் என்பது உடல் முழுதும்  விரவி உள்ளது. ஆதலால் உடலால் இயற்றப்படுவது என்பது உள்ளத்தால் இயற்றப்படுவதுமாகும்.  

கிருஷ்ணர்:  மெய்மை நோக்கி கொண்டு செல்லாத செயல் வேள்வியென ஆகுமா?
கௌதம சிரகாரி : அப்படி ஒரு செயல்  நிகழாது. எல்லாச் செயல்களுக்கும் பலன் உண்டு என்று அளவை நெறி (பூர்வமீமாம்சைகூறுகிறது

கிருஷ்ணர்ஒரு செயலின் முழுமை  என்பதை வரையறுப்பது  செயலின் இலக்காசெயலின் வெற்றியாஎண்ணமா அல்லது செய்கையா எது தீர்மாணிக்கிறது?

கௌதம ஏகதர்: இவை யாவும் நம் கையில் இல்லை. ஆகவே   முழுமையான உள்ளத்தோடு பிழைகள் இன்றி ஆற்றுவது ஒன்றே நாம் செய்யக்கூடியது அதையே செயலின் முழுமை எனக் கொள்ள முடியும்.

கிருஷ்ணர்: செயலுக்கு அடிப்படியான மெய்மையா அல்லது செயல் செய்வதன்  நெறிகளா எது முக்கியமானதுஅந்த மெய்மைக்கு எதிராக நெறிகள் முரண்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்

கௌதம ஏகதர் செயல்கள்  என்பது இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருப்பது  புடவியின் நிகழ்வு செயல்களால் நெய்யப்பட்ட அது ஒரு வலைஒருவன் அவன் எண்ணியும் எண்ணாமலும் ஆற்றும்  செயல் அந்த வலையில் ஒரு கண்ணியென ஆகிறது. இதில் செயலே முக்கியமானது செய்பவனோ அவன் உள்ளமோ முக்கியமில்லாதது

வசிட்ட குந்ததந்தர்:  செயலில் திரண்டு வரும் நுண்மை (விளைவு) செயல்புரிந்தவனுக்கு அப்பாற்பட்டது

கௌதம சிரகாரி தம்மை அனைத்து மாசுக்களும் அற்றவராக தூய்மைகொண்டவரே வேதமுடிபு சொல்லும் முழு மெய்மையை உணரமுடியும்அப்படி முழு மெய்மையை அடைவதே வேதமுடிபு கொள்கையினரின் இலக்குஆனால் அப்படி  முழுதும் மாசற்று இருத்தல் ஒருவரால் இயலக்கூடியது அல்ல. நானே இறை என்ற வேத முடிபினரின் சொல்லில் நான் இருக்கிறது. அப்படி தன்னை நான் என உணரும் அகங்காரம் கொண்டவர் வேத முடிபு மெய்மையை அடைய முடியாது. இதை உணர்ந்தவர் பூர்வ மீமாம்சைஎன்ற வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆகவே செயல் செய்தல் மட்டுமே போதுமானது.   
                                                                                                                                                                                                                                                                                      (
தொடரும்)
தண்டபாணி துரைவேல்