Monday, March 5, 2018

மீமாம்சகர்



அன்புள்ள ஜெ,

வேதத்திற்கு ஒரு மையத்தை உருவாக்கி அதைக் கொண்டு வேதத்தை மாற்றியமைக்க முயல்பவர்கள் வேதாந்திகள். வேதம் என்பது மாறாத ஒற்றைப்பேரமைப்பு என்று நம்புபவர்கள் மீமாம்சையினர். வேதமுடிபினரின் இந்தக் குறுக்குதலால் வேதம் திரிபடைய வாய்ப்புள்ளது. ஆளாளுக்கு அளிக்கும் அர்த்தத்தை வேதத்திற்கு அளித்தால் வேதம் தலைமுறை தோறும் மாறுபடும். கடைசியில் தலைமுறைத் தொடர்பே இல்லாமலாகும். மாறாத எதுவுமே மனிதர்களிடம் இல்லை என்றால் மனிதர்களும் வரலாறும் தொடர்ச்சியும் இல்லை என்றாகும் . தலைமுறைத்தலைமுறையாக மனிதர்கள் திரட்டி எடுக்கும் ஒற்றைஞானம் என்பதே பிரம்மஞானம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே அதை அவ்வப்போது விளக்குவதும் மாற்றிக்கொள்வதும் பிழை என்கிறார்கள். அவர்களின் தரப்பு வலுவானதாகவே தோன்றுகிறது


ஆர். ராகவன்