Tuesday, May 1, 2018

கீதையின் அறம்



ஜெ

வாழ்க்கையின் மிகமோசமான ஒரு சந்தர்ப்பத்தில் நான் கீதையை கண்டடைந்தேன். என்றாவது நேரில் சந்தித்து அதைச்சொல்வேன். நீங்கள் நம்பமுடியாத வீழ்ச்சி. துரோகம், கசப்பு. நானும் அந்த இருட்டுக்குள்தான் இருந்தேன்.

அக்காலகட்டத்தில் கீதை எனக்கு அளித்தது நம்பிக்கையைத்தான். கீதைக்கும் பைபிளுக்கும் என்ன வேறுபாடு? நான் கிறிஸ்தவனாக கொஞ்சநாள் இருந்தேன். என் முன்னாள் மனைவி கிறிஸ்தவப்பெண். [அமெரிக்கன்] சரி. நான் சொல்வது அது இல்லை. அதாவது பைபிள் சரணாகதியை முன்வைக்கிறது. துக்கங்களில் அப்படியே சரனாகதி ஆகிவிட்டால் அது கைகொடுக்கும்

ஆனால் ஒரு அறிவியல் ஆய்வாளனுக்கு அது சாத்தியம் கிடையாது. சரண் அடையவே முடியாது. மூளை திமிறிக்கொண்டே இருக்கும். நான் இரண்டாண்டுகாலம் பைபிளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறேன். அதன்பிறகு ரொம்பத் தற்செயலாகக் கீதை அது நம்பிக்கையை அளித்தது. போராடவும் துணிவைக்கொடுத்தது

யுதிஷ்டிரர் சகுனியிடமிருந்து மீண்டுவந்து அறங்களைப்பற்றிப் பேசியபோது நான் பதற்றம் அடைந்தேன். கீதை அதைச்சொல்கிறதா என்று தோன்றியது/ அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் கீதை சொல்கிறது என்று சொல்லிவிடமுடியும். ஏனென்றால் இங்கே சுயமுன்னேற்றநூலாக கீதையைச் சொல்பவர்கள் அதைத்தான் சொல்கிரார்கள். ஆகவே எனக்கு பதற்றமாக இருந்தது

ஆனால் அந்த முதன்மை அறத்தை கிருஷ்ணன் சொல்லி வாசித்தபோது பரவசமாக இருந்தது. மேலே யோசிக்கவே தோன்றவில்லை. அனைத்து உயிர்களையும் தங்கள் அறத்தைச் செய்யச்சொல்லும் கீதை முதன்மை அறம் தன்னிடமே என தெய்வம் சொல்வதையே சொல்கிரது

அந்த மெய்யை நீங்கள் அழகிய வரிகளால் சொல்லி கொண்டுசென்று கீதையுடன் இணைத்துவிட்டீர்கள் 

படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.

காலையில் எழுந்து உலகைப்பார்க்கும்போதெல்லாம் இந்த வரி ஞாபகம் வந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க்கையை வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்


எஸ்.