Wednesday, April 25, 2018

இரண்டுவகைஏனென்றால் கதை மீண்டும் நிகழும் ன்று அந்தப்பெண்குழந்தை சொல்லுமிடத்தில் அதே உனர்ச்சியை நானும் அடைந்துகொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். எல்லா கதையும் மீண்டும் நிகழ்கிறது. இந்த ரெக்கரிங் தான் மகாபாரதத்தின் தர்சனம் என நினைக்கிறேன். 

வியாசரின் கதை இரண்டுவகையிலே திரும்ப நிகழ்கிறது. ஒன்று  முற்பிறப்பு க்டன் தீர்வது. வியாசர் அவருடைய முற்பிறப்பில் கண்ணில்லாத ரிஷியாக இருந்தார். அதை அவர் ஈடுசெய்கிரார். இன்னொன்று தந்தை செய்வதன் தொடர்ச்சி. பராசரர் செய்வதன் ஈடுஆக இப்போது மக்கள் சாகக்கொடுக்கிறார். இரண்டு வகையான வினைகள் உள்ளன. ஒன்று முற்பிறப்பு அதாவது பிரார்த்தம்.. இன்னொன்று பிதுரார்ஜிதம்


ஸ்ரீனிவாசன்  

காலமின்மை
ஜெ

இமைக்கணம் என்பது காலமின்மை. எதிர்காலமும் அதற்குள் அடங்கும். நாவல் மிகச்சரியாக முதற்கனலில் வியாசர் வந்து பாரதக்கதை சொல்லி தட்சனை விடுவிக்கும் இடத்திற்கு டைவ் அடித்துவிட்டது. ஒருதுளி நஞ்சு மிஞ்சியிருக்கவேண்டும் என்பதுதான் வியாசர் அங்கே சொல்வது. அது அவருடைய தந்தை பராசரருக்கு அவருடைய தந்தை வசிட்டர் சொன்னது. அரக்கர் குலம் முழுமையாக அழியக்கூடாது என்று. இங்கே நாகர்குலம் அழியக்கூடாது என்கிறார். ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும், ஒரு சொல் எஞ்சியிருக்கவேண்டும் என்று அவர் சொல்வது இதைத்தான்

அருண்

இமைக்கணம்அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
 

"ஒரு சிறு இடைவெளி" பதிவும், தள முடக்கமும், "இமையத்தனிமை" பதிவும் நடந்து பல வருடங்கள் ஆனது போல் உள்ளது !!.. இமைக்கணம் முழு வீச்சுடன், ஆழத்துடன் செல்கிறது..  

வெண்முரசு படித்துக்கொண்டிருக்கும் போது, பல முறை நாவலுக்கு வெளியே தமிழ் இலக்கிய, அரசியல், சமூக சூழலில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், சர்ச்சைகள் போன்றவை, அப்பொது வந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரிலும் ஏதோ ஒரு கோணத்தில் கதையின் ஒரு அங்கமாக வருவது போல் தோன்றும்.. தங்களுக்கு இதை பற்றி கேட்க நினைப்பதும் உண்டு.. ஏதோ ஒரு தளத்தில், வெளி உலக நிகழ்வுகள் உங்கள் மனதுள் சென்று புனைவாக கலந்து வெளி வருவது போல....

இப்போதும் இதுவரை வந்துள்ள இமைக்கணம் கதையும், உங்கள் இமையப்பயணம், அதை தொடர்ந்த இமையத்தனிமை பதிவுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது போல் தான் உள்ளது.. குறிப்பாக வியாஸனின் கேள்வி பகுதி.. என் பிரமையா என்றும் தெரியவில்லை.. இவ்வளவு தூரம் தொடர்பு படுத்தக்கூடாது என்று...

இந்த வேளையில் வந்த இந்த உங்கள் பிறந்த நாள் சிறப்பாக அமையவும், தங்கள் பணி மேலும் உச்சத்தை அடையவும், மனம் நிறையவும், மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்
வெண்ணி

அன்புள்ள வெண்ணி

பொதுவாக வெண்முரசுக்கும் புற்ச்சூழலுக்கும் தொடர்பில்லை. நான் அதை மிகத்தெளிவாகவே இரண்டாகப் பகுத்திருக்கிறேன்

ஆனால் நான் செல்லும் பயணங்கள் பெரும்பாலும் வெண்முரசுடன் இணைந்துகொள்கின்றன. பயனத்தின் நோக்கமே அதுதான்

ஜெ

ஆஜகவம், குருதிச்சாரல்மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சில விஷயங்கள்.

1) (சொல்வளர்காடு – 50) மாந்தாதா ஏந்திய வில்லும், (குருதிச்சாரல் – 48) பிருது ஏந்திய வில்லும் ஒரே பெயர் - ஆஜகவம்.

2) கழுகு வடிவ யாகசாலை எவ்வாறு உள்ளது என்று இந்த பக்கத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்
 http://www.thehindu.com/lf/2004/06/17/stories/2004061701860200.htm

3 ) குருதிச்சாரல் – 48, துரியோதனன் பேசும் பேச்சும், மூதாதை குரு பேசிய  பேச்சும் (குருதிச்சாரல் – 2) ஒரே கருத்தை உடையதாக உள்ளது.

4)  "முதற்கனலில்" - பீஷ்மரின் பிறப்பு - தண்ணீரில் பெற்றெடுப்பாள்.
இப்போது இதே போல் பல இடங்களில் பின்பற்றுகிறார்கள்.

5) வெண்முரசில் இதுவரை அடுமனையாளர்கள், குதிரை சூதர்கள், பாணர்கள், குகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், பந்தல் அமைப்பவர்கள், வியாபாரிகள், ஷத்ரியர்கள், விவசாயிகள் - இவர்களது தொழில் விவரணைகள் வந்திருக்கிறது.
இதுவரை வராதது:- இரும்பு கொல்லர்கள், படைக்கலம் செய்வோர், தங்க கொல்லர்கள், மரவுரி தயாரிப்போர் (இவர்களெல்லாம் தங்கள் தொழில் மூலம் மெய்மை அடைய வேண்டாமா?)


நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.


மனோஹரம்அன்புநிறை ஜெ,

வியாசன் பெருவெளியின் முடிவிலியிலிருந்து மீண்டு தன் குடிலுக்கு வந்து, யமன் தன் இறப்புத்தொழில் நிறுத்தியதும் நிகழும் பெருந்துயரை, பிரபாவன் தியானிகன் கதையை எழுதத் தொடங்குவது காலம் ஒரு சுழியென நின்றிருக்கும் நைமிஷாரண்யத்தின் அழகு. 

யமன் செய்தொழில் நிறுத்தக்காரணமாகும் அறம் குறித்து உருவான அமைதியின்மையைப் போக்க ஒவ்வொரு உருவாக எடுத்து இளைய யாதவரை அணுகுகிறார்.  வியாச உருக்கொண்டு யமன் பெறும் அறிதலை வியாசன் எழுதும் கதையில் வரும் யமன் கொள்ளும் வினாக்கள் மற்றுமொரு வியாசனை நிகழ்த்தக் கூடும். எண்ணற்ற வியாசர்கள், அவர்களிலெழும் எண்ணற்ற சுகர்கள்.

மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் உள்ளே வாசகனும் நுழைந்து விட்ட அனுபவம்.

மிக்க அன்புடன்,
சுபா

Tuesday, April 24, 2018

விதைமலர்காடு
அன்புநிறை ஜெ,

எல்லா நாளும் விடிவதும் முடிவதும் உங்கள் எழுத்துக்களோடுதான் எனினும் இன்றைய நாள் மிக இனிது. அவ்வண்ணமே உங்களுக்கும் இந்தப் பிறந்த தினம் இனிமையொடு கழிந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் பல்லாண்டுகள் மலர்காடென எங்களுக்குள் விதைத்து கனிந்தெழுந்து எங்களை வாழ்த்துங்கள்.

எழுதுவதனைத்தும் தன்னை அறிவதற்கே; எழுதி எழுதித் தன்னையும் தன் வழியையும் இலக்கையும் கண்டடையும் பொருட்டே என்று கூறியிருக்கிறீர்கள். 
நேற்றைய இமைக்கணம் (https://venmurasu.in/2018/04/21/நூல்-பதினேழு-இமைக்கணம்-28/) தங்களை முழுமையாகத் தொகுத்துக் கொள்ளும் வகையெனத் தோன்றியது. 

//ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார்//

//உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை”//

குரு தந்தையென நின்று உங்களுக்கு உரைத்தது அல்லவா இது. 

மிக்க அன்புடன்,
சுபா