Wednesday, July 9, 2014

வண்ணக்கடல் நகர்களின் காட்சி ஏன்?

அன்புள்ள ஜெ,

வண்ணக்கடல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இளநாகன் இந்தியாவில் உள்ள நாடுகள் வழியாகச் செல்லும் வடிவம் உற்சாகமான வாசிப்பை அளிக்கிறது. ஆனால் இது கதையளவில் எந்தவகையில் உதவுகிறது?

சரவணன்

அன்புள்ள சரவணன்

கதை முன்னும்பின்னும் போகும் ‘சொல்லல்’ முறைக்கு உதவுகிறது. அர்ஜுனன் கதையைச் சொல்லும்போது தருமன், விதுரன் ,குந்தி ,காந்தாரி கதைகளை முழுமையாக விட்டுவிட முடிகிறது. அது ஒரு க்தை ஒருமையை அளிக்கிறது

பாரதம் என்பது ‘பாரத நிலம்’கூட. அன்றைய நிலக்காட்சிகளில் கடலோரநிலங்கள் பின்னர் வருவதில்லை. ஆகவே இங்கே அச்சித்திரம் அளிக்கப்படுகிறது

நிலத்துடன் இந்தியசிந்தனையின் ஒரு குறுக்குத்தோற்றமும் வருகிறது. அதை மையக்கதையுடன் இணைத்து சிந்திக்கலாம்

ஜெ