Wednesday, July 9, 2014

அவதாரங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
குந்திக்கு கார்க்கோடகன் சூரியமைந்தனைக் காட்டும் பகுதிகளைத் திரும்பதிரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்அச்சித்திரத்திலிருந்து வெளியே வரவேமுடியவில்லை அளிப்பதற்கெனவே தோன்றிய கைகளைக் கொண்டிருப்பதற்காகத்தானே அவ்வுடலே படைக்கப்பட்டிருக்கிறதுகைகளென்னும் மலர்களைத் தாங்கிய மரமாகிய உடல்அடைவதற்காக அல்லாமல் அளிப்பதற்காகப் போரிடுமொருவன்,அளிப்பதற்காகத் தன் வீரத்தையே உதறிச் செல்ல முடிபவன்..’
உறக்கமிழக்கச் செய்த சொற்கள்புவியிலனைத்தும் அழிந்தபின்னும் அத்தகையவன்தானே எஞ்சியிருப்பான்!
திருதராஷ்டிரனுக்கு விழிகளாயிருக்கும் சஞ்சயன்தான் கர்ணனை எடுத்து வளர்க்கும் சூதர் என நினைத்துக் கொண்டிருந்தபோதுஅதிரதன் என்ற அங்கநாட்டவரிடம் வளர்கிறான்எதிர்காலத்தில் அங்க நாட்டுக்கரசனாகவிருப்பவன் இப்போதே அங்கே தயாராகிறான் போலும்!  நாட்டையும் துரியோதனனிடம் பெறாமல் தானே அரசனாவானா என்ற ஆர்வம் மேலிடுகிறதுகொடுப்பவன் பெற்றுக்கொள்வானா என்ன?
 மதுரையில் லோமச கலிகர் வாழ்த்துமிடத்தே, “அவ்வாறாக மண்நிகழ்ந்த ஐந்து அவதாரங்களை வாழ்த்துவோம். மீனாமைபன்றிசிம்மக்குறியோனாக வந்தவனை வணங்குவோம்” என்கிறாரேகண்ணன் அப்போது சிறுவனாக இருப்பான் என எடுத்துக்கொண்டாலும் அச்சமயத்திலே பரசுராம மற்றும் ராம அவதாரங்கள்  நடந்துவிட்டனவேராமனைத் தமிழ் நிலம் அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லையோ!
அன்பு, நன்றி,
ராகவேந்திரன்


பத்து அவதாரங்கள் என்னும் கணக்கு பின்னால் வந்தது. பரசுராமன், பலராமன், கண்ணன் ஆகியோர் அப்போது இருந்தார்கள். ராமன் சற்று காலத்தில் பின்னாலுள்ளவன். எஞ்சிய ஐந்து அவதாரங்களும் புராணங்கள். இவர்கள் வரலாறு. புராணமும் வரலாறும் இணைந்த புள்ளி மகாபாரதகாலத்துக்குப்பின்னாலாக இருக்கலாம்

ஜெ