Wednesday, August 20, 2014

அஸ்வத்தாமா

அன்புள்ள ஜெ..
 
மகாபாரதத்தில் முக்கியமான ஒரு கேரக்டர் அஸ்வத்தாமா.. இன்றும் வாழ்பவனாக கருதப்படும் அழிவில்லா கேரக்டர். ஆனால் அந்த கேர்க்டரைப்பற்றி அதன் ஆழம் பற்றி நமக்கு அதிகம் அறிமுகம் ஆனது இல்லை.
 
அந்த குறை வெண்முரசு நாவலில் தீர்ந்தது. அவனது கோபம், திறமை, பாண்டவர்களின் எதிர்தரப்பாக நிற்க வேண்டிய சூழல் என உணர்வுபூர்வ்மாக விளக்கி இருந்தீர்கள்.. குறிப்பாக அர்ஜுனனுடனான மோதல் ,  துரோணர் மீதான பொசசிவ்னெஸ் கலக்கல்.
 
அந்த பகுதி உக்கிரமாக அமைந்ததன்  அடித்தளம் சு.ரா  நினைவின் நதியில் நூலில் இருப்பதாக கருதுகிறேன்.
 
சு ரா மீது உங்களுக்கு அந்த வயதில் இருந்த ஈர்ப்பு , அவருடன் வேறு யாரும் நெருக்கம் ஆனால் அவர்கள் மீது ஏற்படும் மெல்லிய பொறாமை, இன்னும் சொல்லப்போனால் கண்ணன் மீது ஏற்பட்ட பொறாமை என சொல்லி இருப்பீர்கள்..இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருப்பதாகவும் சொல்லி இருப்பீர்கள்.. அந்த வயது உணர்வை நேர்மையாக பதிவு செய்திருப்பீர்கள்..
 
அந்த சம்பவங்கள், அஸ்வத்தாமா - அர்ஜுனன் பகுதியின்போது நினைவுக்கு வந்தனவா ?
 
அன்புடன்
சுந்தரேஷ்


அன்புள்ள சுந்தரேஷ்

இருக்கலாம். ஆனால் அப்படி பார்த்துக்கொண்டே போனால் முப்பதாயிரம் பக்க சுயசரிதையாக மாறிவிடாது?

ஜெ