Tuesday, April 17, 2018

ரதி விஹாரி



இனிய ஜெயம் 

மலைப்பாடல் நாவலில் பீஷ்மர் ஹஸ்தினாபுரி நுழைகையில் அறிமுகம் ஆகும் விதுரன் , அன்றைய காலையை இனிமை செய்த ரதி விஹாரி எனும் சொல்லுடன் திளைக்கிறான் . அப்படி ஒருவன் இருக்க சாத்தியமா அல்லது காவியக் கற்பனையா என நினைக்கிறான் .

இதோ ரதி விஹாரி அவன் முன் தோன்றி  அவனுக்கான மெய்மையை அளித்து விட்டான் .  அஸ்தினா புரியின் மறைமுக ஆட்சியாளனாக  விதுரன்  நீலனில் துவங்கி நீலனில் முழுமை கொண்டு விட்டான் .

முன்பு ஒரு சமயம்,அஸ்தினா புரியின் படைகளை தனது நிலத்தை வெல்ல , பேச்சின் வழியே  கொள்கிறான் .எல்லா வகையிலும்  விதுரன் கையில் இருந்து அவனது அதிகார உரிமைகளை செயல் இழக்க செய்கிறான் .   அன்று விதுரன் அவன் விரும்பும் விதுரன் எனும் பிம்பத்தை உடைத்து எறிவேன் என்று சொல்லி படை உதவியை கொள்கிறான் .

தனது செயலின் முழுமை அதன் வெற்றியின் பொருட்டு ,அதன் தடையாக எதிர் நிற்கும் அனைத்தயும் அழித்து முன்னகர்வேன் என்கிறான்  அன்று நீலன் .

அன்று நீலன் சொன்னதையே இன்று நீலனுக்கு எதிராக நிறுத்துகிறார் விதுரர் . போரை விழைபவன் நீலன் .அதன் பொருட்டு இப்போது எதையும் செய்பவன் .என குற்றம் சுமத்துகிறார் .

ஆழ்மன காரணம் விதுரன் அஸ்தினாபுரி அரசன் .அந்த அஸ்தினபுரியை வெல்ல நிற்பவன் நீலன் .விதுரன் அவனது ஆ

உள்ளத்தால் எப்போதும் இகழும் யாதவக் குடியிநன் .

முன்பு விதுரன் எனும் பிம்பத்தை முன் வைத்து நீலன் வெல்கிறான் .இன்று அந்த பிம்பத்தை உடைத்து எறிகிறான் இந்த ரதி விஹாரி ,மோஹ விஹாரி .

முன்பு விதுரனுக்கு லஹிமாதேவியின் சொற்கள் அவனது ஆழ் மன விழைவின் பகடைக்காய்கள் .

இதோ விதுரன் மீண்டு விட்டான் .இனி லஹிமாதேவி அவனுக்கு ,அவனது செயல் முழுமைக்கு ,அது படைக்கலம் . 

கடலூர்சீனு