Sunday, April 8, 2018

துன்பம்தேடல்



அன்பை வேண்டி பொறுப்பின் துயரைச் சுமப்பவர் மானுடர். .காதலுக்காக பிரிவை. பற்றினால் இழப்பை. ஆணவத்தால் புறக்கணிப்பின் வலியை. உடைமையின் பொருட்டு எதிர்ப்பை. வெற்றிக்காக தோல்வியை. பிதாமகரே, இங்கிருந்து நோக்குகையில் எட்டுகால்களால் இரைதேடும் பூச்சிகளைப்போல மானுடர் துயர்தேடிப் பசித்தலைவதையே காண்கிறேன் - கீதாச்சாரியனின் வரிகளாக வரும் இந்த்தகருத்தை மட்டும் தனியாகப்பிரித்து எடுத்து சிந்தனைசெய்துகொண்டிருக்கிறேன். மனிதர்கள் துன்பத்தைத் தேடிப்பெற்றுக்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எனக்குத்தெரிந்த எல்லா வாழ்க்கைகளையும் உடனே தேடிப்பார்க்கிறேன். அனைத்தும் இப்படித்தான். துன்பம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சவால் இல்லை. செய்வதற்கு ஒன்றும் இல்லை. குடும்பம் தொழில் எல்லாமே துன்பத்தைத்தேடிப்பெறுவதுதானே? பொதுச்சேவைகூட தேடிச்சென்று அடையும் துன்பம்தானே? மனிதகுலமே துன்பத்துக்காக வேட்டையாடிக்கொண்டிருக்கிறது என்றவரியை படித்ததும் திடுக்கிட்டேன். ஆனால் அதுவே சரி என்றும் அதை நனே முன்னரே சிந்தனைசெய்திருக்கிறேன் என்றும் தெரிந்தது

நரேந்திரன்