Sunday, April 8, 2018

விளக்க கீதை




ஜெ

இந்த  ‘கீதை விளக்க கீதை’யை கீதைபற்றிய விவாதங்களுடன் இணைத்துதான் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். வேள்வியின் அன்னத்தை தவிர வேறு அன்னத்தை உண்பது பாவம் என்று ஒரு வரி கீதையில் வரும்

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது

என இங்கே ஜனகர் சொல்கிறார். கொடுக்கும்போது தன்னை நினைக்கக்கூடாது. அன்பு கொள்ளும்போது தன்னைமட்டுமே நினைக்கவேண்டும். அறம்செய்கையில் எதையும் நினைக்கக்கூடாது. அப்போது தனக்கு என்ன கிடைக்கும் என்னும் கணக்கே இருக்காது. அதுவே வேள்விச்செயல் என்று ஆகும்.

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான்

என்ற வரி அந்த வேள்வியின் பயனை மீண்டும் விளக்குகிறது. வரிவரியாக படிக்கவேண்டிய ஒரு பகுதி இது

ஸ்ரீனிவாசன்