Thursday, April 12, 2018

முதுமையின் தன்னுணர்வுகள்



அன்பு ஜெ ,
      

 இமைக்கணத்தில், பல்வேறு நிலையில், முதுமையின் தன்னுணர்வுகள் வெளிப்படுகின்றன.பல உளவியல் சார்ந்த கருத்துக்கள் வாழ்வியலின் பல்நிகழ்வுகளை ஒப்புநோக்க வைக்கின்றன. சொல்லொன்னா கருத்துகளும் , தங்களின் படைப்பூணூடே கடந்து செல்ல முடிகிறது.
            

முன் பதிவுகளிலே இதைப்பற்றி பரக்க பேசியுள்ளீர்கள்.யயாதியின் ஊடே. முதுமையென்பது உடலுக்கு மட்டுமானதல்ல.  மெய்யறிவால் , அனுபவத்தால் , தன்னிளையோருக்கு சொல்லும் நிலையிலிருப்பது.ஆனால் பீஷ்மரின் வாக்காக , முதியவர்களை குழவியென எள்ளுகிறது இளையுலகம் என்றும் குறித்துள்ளீர்கள்.
              

கர்ணனது நினைவாக அணிகலைந்து காடேகும் நிலையில் , ஆடியில் தன்னுரு பார்த்து , அவயமென்று அணிகலளையே நோக்கியதை குறிப்பதும் , பலரின் திடுக்கிடலேயாகும்.மானிடயிருப்பென்பது ஆணவமே என்கிறீர்.உண்மையே! தன் குலத்தாலும் செல்வத்தாலும் , கல்வியினாலும் பெற்ற அறிவை ஆணவமாக சூடியவர்கள் , தானடைந்த முதுமையில் , இழந்த இவற்றினூடே மிச்சமிருப்பதை , எளியதேயாயினும் காக்க நினைப்பதையும் அதற்கான போராட்டாமாகவும் வாழ்வு அமைவதை தங்களின் எழுத்துகள் கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.இளங்காற்றின் சிறு இலையேயாயினும் புண்படும் மெல்லிய உணர்வின் தாக்கத்தைச் சொல்லும் தங்களின் வரிகள் அசாத்தியமானவை.
அன்புடன்,

செல்வி அழகானந்தன்
கடலூர்.