Tuesday, April 24, 2018

வேங்கை தரிசனம்!




அன்பு மிக்க ஆசிரியருக்கு,

வணக்கம்.


இன்றைய வெண்முரசு [21.4.2018]. என்பது எனக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம். தங்களின் உள்ளத்தின் நாவுகள் உள்ளிட்ட பதிவுகளைத் தொகுத்துக்கொண்டுதியானம் என்ற ஒரு அறிதல் முறை பற்றிய ருத்துகளைவறையறுத்துக்கொண்டுள்ளேன். . ஆனால் அத்தகைய அறிதல் முறையில் மிகவும்அந்தரங்கமான ஓர் அனுபவநிலையை, மிகவும் அகவயப்பட்ட ஓர் நிலையை புறநிலையில்எழுத்தாக்குவது எந்த அளவிற்கு சாத்தியம்? அவ்வாறு ஆக்கப்படும்போது அதில்புனைவின் நிழல் படிந்துவிடாதா? ஆகிய ஐயங்கள் எனக்குள் வெகுநாட்களாகஇருந்துவந்தன.


அனைத்திற்கும் விடை இன்றைய அத்யாயம். என்ன சொல்வது, ஏதும் செய்ய இயலாமல், காலை முதல் அமர்ந்திருக்கிறேன். இன்றைய அத்யாயத்தைப்பற்றி இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.உண்மையும் அழகும் முயங்கிய தங்களின்ஆயிரக்கணக்கான பக்கங்களில் இன்றைய அத்யாயம் அந்த உண்மையான அழகான எழுத்துமிகவும் அகநிலையான ஓர் அனுபவ வெளியை எடுத்துரைக்கும் சவாலை எளிதில்கடந்துவிடுகிறது.பார்த்தனின் அம்பு என, அவன் பாகனின் சொல் என!ஊழ்கத்தில் தோன்றும் இருமை அனுபவங்களைத் தங்களின் உள்ளத்தின் நாவுகள்
துணைகொண்டு புரிந்துகொண்டேன். இன்று அதுவே மரமாகவும், புலியாகவும் இருநிலையில் வெளிப்படுகிறது. அதை ஆயிரம் முறை நாங்கள் கடந்தும் கவனிக்கத்தவறிய வேங்கை என்ற ஒற்றைசொல்லின் துணைகொண்டு நிருவியது மீண்டும்சொல்கிறேன், ஒரு சாதனை! இத்தகைய அக எழுச்சியை உள விரிவை தங்களின் அறம்தொகுப்பில் அமைந்துள்ள பெருவலி கதையில் அவர் தரிசிக்கும் இமய ஒளியில்நானும் அடைந்திருக்கிறேன். இத்தகைய இடங்கள் பெரும்பாலும் தர்க்கத்தில்துவங்கும் எழுத்து அதை உதிர்த்துவிட்டு மேற்கிளம்பும் நிலை, எவர் அறிவார்சிறகுகள் இல்லாமலும் பறவைகள் பறக்கக்கூடும்! இது நிகழும் நாளிலேயே படிக்கமுடிந்த எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு உதவும் வாசிப்புமென்பொருளைக் கண்டறிந்து உதவிய, அந்த உயர்ந்த இதயங்களுக்கு உளமாற நன்றி
செலுத்துகிறேன்.


எப்போதும் அன்புடன்,


கு. பத்மநாபன்,
குப்பம்.